மேலும் செய்திகள்
பொது - லாரி மோதி கேட் பழுது ரயில் சேவை பாதிப்பு
03-May-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 19வது வார்டில், ரயில்வே சாலை உள்ளது. காஞ்சிபுரத்தின் பழைய ரயில் நிலையில், இங்கு அமைந்திருப்பதால், ரயில்வே சாலை என, ஆங்கிலேயே ஆட்சியின்போதே பெயர் பெற்றது.இச்சாலை, 100 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே சாலை என பெயர் பெற்று வந்த நிலையில், அந்த வார்டின் கவுன்சிலர் கவுதமி, அச்சாலைக்கு அம்பேத்கர் சாலை என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, மாநகராட்சி கூட்டத்தின்போது மனு அளித்திருந்தார்.அதைத் தொடர்ந்து, 22ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், ரயில்வே சாலைக்கு அம்பேத்கர் சாலை பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம், ரயில்வே சாலையை, அம்பேத்கர் சாலை என, அழைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆவணங்களிலும், பெயர் பலகையிலும், பெயர் மாற்றம் செய்து, புதிய பெயரை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
03-May-2025