உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு

உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைத் திருவிழா நேற்று நிறைவு பெற்றது. தமிழகத்தில் உள்ள 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 'கலையால் கல்வி செய்வோம்' எனும் தலைப்பில், கலைத் திருவிழா நடத்த, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, உத்திரமேரூரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கடந்த செப்.18ம் தேதி கலைத் திருவிழா துவங்கியது. அதை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் கவிதை, சிறுகதை, வர்ணனை, பட்ஜெட் போர், தனிப்பாடல் போட்டி உள்ளிட்ட 32 போட்டிகள் நடந்தன. இறுதி நாளான நேற்று, மாணவ -- மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கல்லுாரி முதல்வர் சுகுமாறன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை