உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பட்டா வழங்குவதில் இழுபறி மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

பட்டா வழங்குவதில் இழுபறி மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.இக்கூட்டம் நடந்த போது, பகல் 12:00 மணியளவில், கூட்டரங்கு வெளியே, பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.அப்போது, கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பெட்ரோல் கேனை பிடுங்கி வீசினர். அவரை மீட்ட போலீசார், அரசு ஊழியர்கள், தண்ணீர் ஊற்றி கூட்டரங்கு அருகே அமர வைத்தனர்.போலீசார், மூதாட்டியிடம் விசாரித்ததில், சென்னை போரூர் பகுதியில் வசிக்கும் கீதா, 65. என்பதும், இவருடைய நிலம் படப்பையில் உள்ளதாகவும், நிலம் தொடர்பாக பட்டா வழங்காமல், 10 ஆண்டுகளாக அலைக் கழிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுகள் வந்த பின்னும், பட்டா வழங்க மறுப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.சமாதானம் செய்த வருவாய் துறையினர், சொத்து தொடர்பாக விசாரணை வருவாய் துறை அதிகாரியிடம் விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுப்படும் என, கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nandakumar Naidu.
மார் 25, 2025 09:46

கேடு கெட்ட விளங்காத படு கேவலமான ஆட்சி. முதியோர்களை கூட மதிக்க தெரியாத கேவலமான அதிகாரிகள். அவர் தீகுளிக்க முயன்ற போது தான் இவர்களுக்கு புத்தி வந்ததோ?


S Sivakumar
மார் 25, 2025 08:36

இந்த மர்மம் ஏன்?