| ADDED : நவ 19, 2025 04:38 AM
திரும: ங்கலம்: பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஆட்டோவை பத்திரமாக சாலையோரம் நிறுத்தி, மயங் கி உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முருகன், 41; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று காலை அண்ணா நகரில், மூன்று பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி, சேத்துப்பட்டு மகரிஷி பள்ளிக் கு அழைத்துச் செ ன்றார். காலை 8:45 மணிக்கு அண்ணா நகர் 15வது பிரதான சாலையில் செ ன்றபோது, முருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மாரடைப்பு என்பதை உணர்ந்த மு ருகன், வலியை பொருட்படுத்தாமல், குழந்தை களின் உயிரை காப்பாற்றும் வகையில், சாலை யோரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மயங்கினார். ஆ ட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் அலறினர். அங்கிருந்தோர் உதவியுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முருகனை ப ரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் போ லீசார் விசாரிக்கின்றனர். உயிரிழக்கும் முன், தன் ஆட்டோவில் பயணித்த பள்ளி குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய அவரின் செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.