உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாற்று திறனாளிகளுக்காக பணியாற்றுவோருக்கு விருது

மாற்று திறனாளிகளுக்காக பணியாற்றுவோருக்கு விருது

காஞ்சிபுரம்: தமிழகம் முழுதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்கள் அல்லது நிறுவனங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் வரும் டிச., 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் விருதுகள் வழங்க உள்ளார்.இதில், செவித்திறன், பார்வைத்திறன், அறிவுசார் குறைபாடு உட்பட 10 வகையான குறைபாடு உடையவர்களுக்காக பணியாற்றியவர் மற்றும் செவித்திறன், பார்வைத்திறன் மற்றும் அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.இவர்களுக்கு, விருதும், தலா 10 கிராம் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளன.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் அக்., 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை