உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடைகளில் தமிழ் பெயர் பலகை விழிப்புணர்வு கூட்டம்

கடைகளில் தமிழ் பெயர் பலகை விழிப்புணர்வு கூட்டம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், கடைகளில் தமிழ் பெயர் பலகை வைப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம், பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் முன்னிலை வகித்தார். அதில், உத்திரமேரூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட, அனைத்து கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில், உள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்துகள் பெரிய அளவிலும், ஆங்கில எழுத்துகள் சிறிய அளவிலும் எழுதப்பட வேண்டும்.வரும் மே 15ம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்பலகை எழுதப்பட வேண்டும்.அவ்வாறு எழுதாத கடைக்காரர்கள் மீது மே 16ம் தேதியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.இதில், வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி