உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உத்திரமேரூர் சாலைகளில் விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் அமைப்பு

 உத்திரமேரூர் சாலைகளில் விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் அமைப்பு

உத்திரமேரூர்: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், உத்திரமேரூர் சாலைகளில், சாலை பாதுகாப்பு வாசகங்கள் எழுதப்பட்ட விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்களை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். உத்திரமேரூரில் இருந்து, காஞ்சிபுரம், வந்தவாசி, செங்கல்பட்டு செல்லும் சாலைகளின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலையோரஙகளில் விழிப்புணர்வு ‛பிளக்ஸ் பேனர்அமைக்கப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர், மெதுவாக செல்லவும், வாகனத்தை முந்துவதில் கவனம் தேவை, ‛ஹெல்மெட் அணிவோம், விபத்தை தவிர்ப்போம்' பாதுகாப்பான இடைவெளி அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, உத்திரமேரூர் சாலைகளில் விபத்துகள் ஏற்படுவது வெகுவாக குறையும் என, நெடுஞ்சாலை துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ