| ADDED : டிச 01, 2025 02:52 AM
காஞ்சிபுரம்: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை பூர்த்தி செய்து, விரைவாக கொடுக்க வேண்டும் என, வருவாய் துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக விடுமுறை தினங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுதும், சிறப்பு வாக்காளர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் படிவத்தை, வருவாய் துறையினர் கிராமங்கள் தோறும், வினியோகம் செய்துள்ளனர். பூர்த்தி செய்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை, வாக்காளர்கள் கடைசி தேதி வரையில் காத்திருக்காமல், விரைந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் தாசில்தார் ரபீக் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குறிப்பாக, சிறுகாவேரிபாக்கம், கோனேரிகுப்பம், சி.வி.எம்.,நகர் உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை நிரப்பி கொடுக்க அறிவுரை வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் சப் - -கலெக்டர் ஆஷிக்அலி, புத்தேரி கிராமத்தில் ஆய்வு செய்தார்.