ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பந்தகால் முகூர்த்தம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8 ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி 29 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தகால் முகூர்த்தம் நேற்று காலை 6:00 மணிக்கு நடந்தது. இதில், கோவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க வேதவிற்பன்னர்கள் மூலம் பந்தக்கால் நடப்பட்டு, தீபஆராதனை காண்பிக்கப்பட்டது.