வெள்ளைகேட் மேம்பாலத்தில் இருபுறமும் தடுப்பு கம்பி அமைப்பு
காஞ்சிபுரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆறுவழி சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன. இதில், வெள்ளைகேட் மேம்பாலத்தின் வழியாக, பெங்களூரு, ஒசூர், தர்மபுரி, வேலுார் ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை மற்றும் சென்னை, சுங்குவார்சத்திரம் மார்கத்தில் இருந்து பெங்களூரு வரையில், வாகனங்கள் செல்கின்றன.இதில், வெள்ளைகேட் மேம்பாலம் ஏற்றம் மற்றும் இறக்கத்தில் சாலை ஓரம் தடுப்பு கம்பிகள் அறவே இல்லை.இதனால், இரு மார்க்கங்களில் இருந்து, வாகனங்கள் நிறுத்தும் போது வாகனங்கள் நிலை தடுமாறும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று, தேசிய நெடுஞ்சாலை மேம்பால கைப்பிடி சுவரின் இருபுறமும் தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடந்து வருகிறது.விரைவில், மேம்பாலத்தின் இருபுறமும், தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நிறைவு பெறும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.