அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம்
காஞ்சிபுரம்,:உலக முதியோர் தினத்தையொட்டி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன் துவக்க உரை நிகழ்த்தினார். இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில வடக்கு மண்டல துணை தலைவர் டாக்டர் எஸ். காசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆரோக்கியம் துணைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். அனுரத்னா முன்னிலை வகித்தார்.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பொருளாளர் பேராசிரியர் டாக்டர் வெ. ஞானகணேஷ் ‛மானிக்கியூன்' என்ற மார்பளவு செயற்கை உடல் மாதிரியுடன் அடிப்படை முதலுதவி பயிற்சி வழங்கினார்.