உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு

தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு

காஞ்சிபுரம்:தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு பெற்று, மகளிர் குழுவினருக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் ஊராட்சியில், மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர்களுக்கு, தேனீ வளர்ப்பு குறித்து 15 நாள் பயிற்சி நடந்தது. இந்த பயற்சி முகாம்களில், தேனீ வளர்ப்பு, தேன் தரம் பிரித்தல், அதை சந்தைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி முடித்த மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிதிக் கட்டுப்பாட்டாளர் அரங்கமூர்த்தி மற்றும் தேனீ வளர்ப்பு பயிற்சி ஆசிரியர் சிவகாமி ஆகியோர் சான்றுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி