மேலும் செய்திகள்
அமராவதிபட்டணத்தில் ரேசன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு
06-May-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாய கூடம் அமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், கனிமவள நிதியின் கீழ், 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.பழவேரி ஊராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, சமுதாய கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தார்.
06-May-2025