உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விநாயகர் கோவிலில் பச்சையம்மன் சன்னிதிக்கு பூமி பூஜை

விநாயகர் கோவிலில் பச்சையம்மன் சன்னிதிக்கு பூமி பூஜை

கூழமந்தல்: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, கூழமந்தல் ஏரிக்கரையில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் வளாகத்தில், அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், சனீஸ்வரர், ராகு-, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னிதி மற்றும் பரிகார ஸ்தலவிருட்சம் உள்ளது.இந்நிலையில், கோவில் வளாகத்தில், புதிதாக பச்சையம்மன் சன்னிதி அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், வாஸ்து சாந்தி ஹோமம், கலச பூஜை உள்ளிட்டவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை