உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரத்த கொடையாளர் தினம் விழிப்புணர்வு பேரணி

ரத்த கொடையாளர் தினம் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் பங்கேற்ற ரத்ததான விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் ஹிலாரினா ஜோஷிகா நளினி துவக்கி வைத்தார்.செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு, ரங்கோலி, கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், ரத்த தானம் செய்த கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் பாஸ்கரன், குருதி மைய மருத்துவர்கள் செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி