மேலும் செய்திகள்
மாகாளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்
11-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவராக, வாலாஜாபாதைச் சேர்ந்த கே.தியாகராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் செயல்பட்டு வந்தனர். இக்குழுவினரின் பதவிக்காலம் கடந்தாண்டு ஆக., 17ம் தேதி நிறைவு பெற்றது.அறநிலையத்துறை சார்பில் மீண்டும் மாவட்ட அறங்காவலர் குழுவிற்கான தேர்வு நடந்தது. இதில், தியாகராஜன் தலைமையிலான செல்வி ஆறுமுகம், கோதண்டராமன், சத்தியமூர்த்தி, வெங்கசேடன் குழுவினரே மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, ஹிந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன் நேற்று பதவியேற்பு செய்து வைத்தார். வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், சித்ரகுப்த சுவாமி கோயில் செயல் அலுவலர் அமுதா உள்ளிட்டோர், புதிய அறங்காவலர் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
11-Jan-2025