உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி சிறுவன் பலி

காஞ்சிபுரம்:பீஹார் மாநிலம், ஜரங் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வர்தாஸ் மகன் முருகேஷ் தாஸ், 29; கட்டுமான தொழிலாளி. இவரது குடும்பத்தினருடன், பால்நெல்லுார் கிராமத்தில் தங்கி, கட்டடம் கட்டுமான பணி செய்து வந்தார்.நேற்று காலை, வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், முகேஷ் தாஸ் என்பவரின் ஆறு வயது மகன் அவிநேக்குமார் பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்துள்ளார். நீரில் மூழ்கி இருந்த சிறுவனை, அவரது பெற்றோர் மீட்டு, மாத்துார் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை