மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்
17-Jan-2026
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர தலைவர் சாந்தி நேற்று துவங்கி வைத்தார். தமிழகம் முழுதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நேற்று துவங்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதுார் நகர தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் 150 பேருக்கு, இட்லி, பொங்கல் உள்ளிட்டவை வழங்கி, இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கினார். நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி கமிஷனர் நந்தினி, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி துணை தலைவர் இந்திராணி, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
17-Jan-2026