ஓவிய தின விழா மாணவர்களுக்கு சான்றிதழ்
காஞ்சிபுரம், உலக ஓவிய தின விழாவையொட்டி, காஞ்சிபுரம் சதாவாரத்தில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தில், ஓவிய பயிற்சி பெற்ற ஐந்து வயது முதல், 16 வயதிற்கு உட்பட்ட 80 மாணவ- -- மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நீலமேகன் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், ஓவிய ஆசிரியர் லோகநாதன். தமிழ்நாடு ஓவியர்கள் சங்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.