உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி செயலரை விடுவிக்க கலெக்டரிடம் தலைவர் மனு

ஊராட்சி செயலரை விடுவிக்க கலெக்டரிடம் தலைவர் மனு

காஞ்சிபுரம்:கரூர் ஊராட்சி பொறுப்பு செயலரை விடுவிக்க வேண்டும் என, அதே ஊராட்சி தலைவர் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து, கரூர் ஊராட்சி தலைவர் ஜானகி அளித்த மனுவில் கூறியதாவது:கரூர் ஊராட்சிக்கு, இலுப்பப்பட்டு ஊராட்சி செயலர் உமாபதி என்பவர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி பணிகளை சரிவர செய்யவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும்,எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே, பொறுப்பு ஊராட்சி செயலரை விடுவித்து, நிரந்தரமாக ஊராட்சி செயலரை கரூர் ஊராட்சி நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை