உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் சமையல்காரர் பலி

சாலை விபத்தில் சமையல்காரர் பலி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி, 55. மல்லியங்கரணை தனியார் பள்ளியில் சமையலர்காரராக வேலை செய்து வந்தார்.இவர், கடந்த 28ம் தேதி, வேலையை முடித்து, தன்னுடன் பணியாற்றும், சத்யா, 45, என்பவருடன், 'டி.வி.எஸ்.எக்ஸ்எல்' டூ - -வீலரில் அமர்ந்து வீட்டிற்கு சென்றார்.அப்போது, மல்லியங்கரணை தபால் நிலையம் அருகே சென்றபோது, மழை வந்ததால் குடையை விரிக்க முயன்றதில், தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவர் உத்திரமேரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ