மேலும் செய்திகள்
மொபைல் போன் பறித்தவர் கைது
07-Feb-2025
காஞ்சிபுரம்:அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு இடையே, மின்சார ரயில் இருப்பு பாதை செல்கிறது.இந்த பாதை ஒட்டி, காஞ்சிபுரம்- அரக்கோணம்-திருத்தணி செல்லும் சாலை உள்ளது. இந்த இரு வழி சாலை சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், தக்கோலம் கூட்டு சாலை வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இருப்பினும், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால், கோவிந்தவாடி, ஊவேரி, கூரம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, ரயில் இருப்பு பாதை கடந்து, மெயின்ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க, கடவுப்பாதைகள் ஓரம் பைபரால் ஆன வேக தடை அமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கிராமப்புறங்களில் இருந்து காஞ்சிபுரம்- அரக்கோணம் பிரதான சாலைக்கு செல்லும் போது, வாகனங்கள் நிதானமாக செல்லும் என, சாலை விரிவாக்க துறை மற்றும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
07-Feb-2025