மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு கையெழுத்து இயக்கம்
21-Nov-2024
குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள்
18-Nov-2024
உத்திரம் | வீடு தேடி குட் நியூஸ் வந்தே தீரும்
17-Dec-2024
உத்திரமேரூர்:குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில், உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமையில் நேற்று நடந்தது.இதில், உத்திரமேரூர் பேரூராட்சியில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிக்கு அனுப்ப வேண்டும். கடைகள், ஹோட்டல்கள், கல் குவாரிகளில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும்.ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை, தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணங்கள் இல்லாத பேரூராட்சியாக மாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில், பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார், குழந்தை பாதுகாப்பு அலுவலர் காயத்ரி மற்றும் பலர் பங்கேற்றனர்.
21-Nov-2024
18-Nov-2024
17-Dec-2024