உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இடநெருக்கடியில் இயங்கும் அங்கன்வாடி மையம் ஓரிக்கையில் குழந்தைகள் பரிதவிப்பு

இடநெருக்கடியில் இயங்கும் அங்கன்வாடி மையம் ஓரிக்கையில் குழந்தைகள் பரிதவிப்பு

ஓரிக்கை:ஓரிக்கையில் சிதிலமடைந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டட கட்டுமானப் பணி துவக்காததால், நெருக்கடி யான இடத்தில் குழந்தை கள் கல்வி பயின்று வருகின்றனர். உத்திரமேரூர் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு ஓரிக்கை, காந்தி நகரில், 2007ல், மாவட்ட சிறுசேமிப்பு ஊக்க நிதியில், 1.52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பராமரிப்பு இல்லாததால், இக்கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, மழைக்கு ஒழுகும் நிலையில் இருந்தது. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால், குழந்தைகள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவலநிலை இருந்தது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் அச்சப்பட்டனர். எனவே, ஓரிக்கை, காந்தி நகரில், சிதிலமடைந்த நிலையில் இயங்கும் பழைய அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு முன், சிதிலமடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போடப்பட்டது. இதற்கு மாற்றாக, அதே பகுதியில், சிமென்ட் ஷீட் கூரை வீட்டின் வராண்டாவில் அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டது. போதுமான இடவசதி, கழிப்பறை வசதி இல்லாமல், நெருக்கடியான இடத்தில் அங்கன்வாடி மையம் இயங்குவதால், இங்கு பயிலும் குழந்தைகள் ஆடி, பாடி விளையாடி கல்வி கற்க முடியாத முடியாத சூழல் உள்ளதால், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஓரிக்கை, காந்தி நகரில், சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை