உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மலர் அலங்காரத்தில் சோழீஸ்வரர் வீதியுலா

மலர் அலங்காரத்தில் சோழீஸ்வரர் வீதியுலா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, கூழமந்தலில் உத்திர கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று மாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, விசாலாட்சி அம்பிகையுடன் உத்திர கங்கைகொண்ட சோழீஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ