மேலும் செய்திகள்
கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் வழிபாடு
22 hour(s) ago
கல்லறை திருநாள் வழிபாடு
22 hour(s) ago
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், கல்லறை திருநாளை முன்னிட்டு, இறந்த முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர். உத்திரமேரூரில், மல்லிகாபுரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில், ஆண்டுதோறும் நவ- 2ம் தேதி கல்லறை திருவிழா அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினர் முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று பூக்களால் அலங்கரித்தும், பழவகைகள் படையலிட்டும், மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்து நேற்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல, நல்லுார், குப்பைநல்லுார், வேடபாளையம், மானாம்பதி கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில், கிறிஸ்தவர்கள் இறந்த முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.
22 hour(s) ago
22 hour(s) ago