உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஈஸ்வரன் கோவில்களில் துாய்மை பணி

ஈஸ்வரன் கோவில்களில் துாய்மை பணி

உத்திரமேரூர்:கொவளை அகத்தீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி நேற்று நடந்தது. திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை திருஆருரன் உழவாரத் திருப்பணி அறக்கட்டளை சார்பில், மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் ஹிந்து கோவில்களில் துாய்மை பணி மேற்கொள்வது வழக்கம். அதன்படி, உத்திரமேரூர் அடுத்த, கொவளை கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று துாய்மை பணியில் ஈடுபட்டனர். அதில், கோவில் வளாகத்தில் உள்ள செடிகள் அகற்றப்பட்டன. பின், சுவாமி சிலைகள் மற்றும் உப சன்னிதிகளும் துாய்மைப்படுத்தப்பட்டன. இதில், திருஆருரன் உழவாரத் திருப்பணி அறக்கட்டளை தலைவர் சிவஅருள், சிவனடியார்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். நெமிலி ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், திருமால்பூர் கிராமம் உள்ளது. இங்கு, அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவனை, திருமால் தவமிருந்து பேறு என அழைக்கப்படும் வரம் பெற்றதால், இந்த ஊருக்கு திருமால்பேறு என அழைக்கப்படுகிறது. இந்த பெயர் நாளடைவில் பெயர் மருவி திருமால்பூர் என அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் குளத்தில் சுற்றிலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், குளம் போதிய பராமரிப்பு இன்றி இருந்து வந்தன. இதையடுத்து, நேற்று முன் தினம், நேற்று ஆகிய இரு தினங்களில் கோவில் குளத்தை துாய்மைப்படுத்தும் பணியில் சிவனடியார்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை