உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டி எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி சாம்பியன்

முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டி எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி சாம்பியன்

காஞ்சிபுரம் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை, கல்லுாரி மாணவியருக்கான ஹாக்கி போட்டி, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.இப்போட்டியில் மாவட்டம் முழுதும் 26 கல்லுாரிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் கீழம்பி எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரியும், கீழம்பி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் மோதின.இதில், எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரி 1- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. கிருஷ்ணா கல்லுாரி இரண்டாமிடம் பெற்றது.வெற்றி பெற்ற எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி மாணவியரை கல்லுாரி முதன்மையர் இராஜகோபாலன், கல்லுாரி முதல்வர் கி.திருமாமகள், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.இதன் வாயிலாக, திருச்சியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரி மாணவியர் தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ