உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முதல்வர் மருந்தகம் விண்ணப்பம் வரவேற்பு

முதல்வர் மருந்தகம் விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பி.பார்ம்., பட்டம் மற்றும் டி.பார்ம்., பட்டய ஆகிய மருத்துவ சான்று பெற்றவர்கள், நவ.,20ம் தேதி வரையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இந்த மருந்தகம் அமைக்க, 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்தம் மற்றும் வாடகை கட்டடமாக இருக்கலாம். அதற்குரிய, சொத்து வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு ரசீது மற்றும் வாடகை கட்டடத்திற்கு உரிமையாளரின் ஒப்பந்தப் பத்திரம் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.இதற்கு, 3 லட்ச ரூபாய் அரசு மானியம் இரு தவணைகளாக ரொக்கம் மற்றும் மருந்துகளாக வழங்கப்படும்.மேலும், கூடுதல் நிதி தேவைபடும் போது, கூட்டுறவு வங்கி கடன் வழங்கப்படும் என, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி