உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் : தமிழகம் முழுதும் 4,500 தொடக்க மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்படும் 33,700 அங்காடிகளில், 30,000த்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.பணியாளர்கள் மற்றும் சங்க அளவிலான நடைமுறை பிரச்னைகளை நிவர்த்தி செய்யக்கோரி, பதிவாளரிடம் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், தமிழகம் முழுதும், 26 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.காஞ்சிபுரத்தில், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள காவலான்கேட் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க நிர்வாகி வாசுதேவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தங்களது, 26 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை