மேலும் செய்திகள்
தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
30-Jul-2025
செய்திகள் சில வரிகளில்
05-Aug-2025
காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்கள், 'தமிழ் செம்மல்' விருது பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்து உள்ளார். இதுகுறித்து கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ் தொண்டை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சி துறையில், 'தமிழ் செம்மல்' விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ் செம்மல் விருதும், 25,000 ரூபாய் பரிசு தொகையும், 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2025ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai என்ற வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள லாம் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். சுய விபர குறிப்புடன், இரண்டு புகைப்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விபரங்களுடன், வரும் 25க்குள், காஞ்சிபுரம் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
30-Jul-2025
05-Aug-2025