உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மஞ்சள் நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

மஞ்சள் நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்:தமிழகத்தில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு, திருப்பருத்திக்குன்றம் ஆகிய பகுதிகளில் மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமான பணிகளையும், துார்வாரும் பணிகளும் நடக்கின்றன.இப்பணிகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, முருகன் குடியிருப்பு பகுதியில் உள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணியை பார்வையிட்டு அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு, கமிஷனர் நவேந்திரன், பொறியாளர் கணேசன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ