மேலும் செய்திகள்
மழைநீரில் மிதக்கும் மாவட்ட பெருந்திட்ட வளாகம்
03-Dec-2024
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், ஹிந்து அறநிலையத்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, கோட்டாட்சியர் அலுவலகம், வணிகவரி, முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அச்சம்
இதுமட்டுமல்லாமல், பெரிய அளவிலான மைதானம் ஒன்றும் அமைந்துள்ளது. கலெக்டர் அலுவலகவளாகத்தை பலரும் பொழுதுபோக்கு இடமாக கருதி மாலை, இரவு, நள்ளிரவு என, நினைத்த நேரத்தில் வந்து செல்கின்றனர்.பகல், இரவு என, 24 மணி நேரமும், வளாகத்தின் அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கும் என்பதால், இரவிலும் பலரது நடமாட்டம் உள்ளது.வளாகத்தில் பல இடங்களில் மின்விளக்குகள் இரவில் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்தவும், போதை பொருள் பயன்படுத்தும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர்.மது அருந்துவோர் பற்றி நடைபயிற்சி மேற்கொள்வோர், போலீசாரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், போதிய நடவடிக்கை இல்லாததால், சமூக விரோதிகளின் புகலிடமாக இந்த வளாகம் இருந்தது. இந்நிலையில், கலெக்டர் வளாகம் முழுதும், கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார். நடவடிக்கை
அப்போது, 'பயன்பாடில்லாத வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.மின் விளக்குளை முறையாக ஒளிர செய்ய வேண்டும் எனவும், பறிமுதல் செய்துள்ள கற்களை ஏலம் விடவும் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10:00 மணிக்கு மேல் பூட்டி வைக்ககலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மூன்று நாட்களாக இரவு 10:00 மணி முதல் கலெக்டர் வளாகத்தின் மூன்று வாயில்களும் மூடப்பட்டன. 'வெளி நபர்கள் யாருக்கும், இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை அனுமதி இல்லை' என, மாவட்ட உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும், 'வளாகத்திற்குள் அதிகாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு எந்தவித தடையும் இல்லை எனவும்,வளாகத்திற்குள் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் வந்து செல்ல தடையில்லை' எனவும்தெரிவித்தார்.
03-Dec-2024