காமாட்சி அம்மன் கோவிலில் அக்., 3ல் நவராத்திரி துவக்கம்
மதுரமங்கலம்,: மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில், சுவர்ண காமாட்சி அம்மன் கோவிலில், 108 சக்தி பீடம் உள்ளது. இங்கு, சாரதா நவராத்திரி மகோத்சவ விழா, அக்., 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்குகிறது.உற்சவத்தை முன்னிட்டு, தினமும் காலை சுவர்ண காமாட்சிக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. இரவில், நவராத்திரி மண்டபத்தில் சுவர்ண காமாட்சி எழுந்தருள்கிறார்.இரவு, 7:30 மணிக்கு பிரபல சங்கீத வித்வான்களின் சங்கீத கச்சேரிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.நவராத்திரி உற்சவத்தின் நிறைவு நாளான அக்., 12ம் தேதி அன்னப்பாவாடை உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கண்ணன்தாங்கல் மங்களாபுர, 108 சக்திபீடம் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.