உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிலையத்திற்குள் வராத பஸ்களால் வாலாஜாபாத்தில் பயணியர் அவதி

நிலையத்திற்குள் வராத பஸ்களால் வாலாஜாபாத்தில் பயணியர் அவதி

வாலாஜாபாத், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வழி தடத்திலான அரசுப் பேருந்துகள், வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்குள் வராததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.செங்கல்பட்டில் இருந்து, வாலாஜாபாத் வழியாக தடம் எண்: 212ஏ, 212பி., ஆகிய அரசு பேருந்துகள் காஞ்சிபுரம் வரை இயக்கப்படுகின்றன. இதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, திருப்பதி வரை இயங்கும் தடம் எண்: 212எச்., அரசு பேருந்தும், காஞ்சிபுரத்தில் இருந்து, கல்பாக்கம் வரையிலாக இயங்கும் தடம் எண்: 157 அரசு பேருந்தும் வாலாஜாபாத் வழியாக இயங்குகிறது.இப்பேருந்துகள் வாயிலாக, வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமத்தினர் மற்றும் ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் பயணிக்கின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் தடத்தில், வாலாஜாபாத் வழியாக செல்லும் அனைத்து வகை பேருந்துகளும், வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்குள் வராமல் ரவுண்டனா பகுதி, பேருந்து நிறுத்தத்தில் நின்று இயக்கப்படுகிறது.இதனால், பேருந்துகளுக்காக பேருந்து நிலையத்திற்குள் காத்திருக்கும் பயணியர், பேருந்து புறப்பாடு குறித்த தகவல் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு தடத்தில் இயங்கும் அனைத்து பேருந்துகளும், வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ