உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்கீழம்பி--ஆரியபெரும்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், சாலையோர மண் அரிப்பால், சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளது.இதனால், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்திற்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.எனவே, கீழம்பி,- ஆரியபெரும்பாக்கம் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -எஸ். நடராஜன், கீழம்பி.வங்கி சி.டி.எம்., இயந்திரத்தில்பணம் செலுத்துவோர் அவதிகாஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், இந்தியன் வங்கியின் பூக்கடை சத்திரம் கிளை இயங்கி வருகிறது. இவ்வங்கியின் வெளிப்புறம் சி.டி.எம்., எனப்படும் பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்துவோர், பின் எண்ணையும், பணம் செலுத்த அக்கவுன்ட் எண்ணையும் அழுத்தும் கீபேடில்' உள்ள எழுத்துக்கள் அழிந்து தெளிவாக தெரியாமல் மங்கிய நிலையில் உள்ளது.எனவே, பணம் செலுத்தும் இயந்திரத்தில் உள்ள கீபேடை அகற்றிவிட்டு புதிய கீபேட் அமைக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சோமசுந்தரம், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி