ஒருமையில் பேசியதாக பேரூராட்சி ஊழியர் மீது புகார்
காஞ்சிபுரம்:மனித மலத்தை அள்ளவில்லை என, அவதுாறாக பேசிய பேரூராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் கண்காணிப்பாளரிடம் துப்புரவு பணியாளர் புகார் மனு அளித்தார்.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 20 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்து வருகிறேன். புதன்கிழமை தோறும் அரைநாள் மட்மே வேலை நாளாக உள்ளது. இருப்பினும், கடந்த 22ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்ய வருகின்றனர் என, திருமங்கையாழ்வார் சுடுகாடு அருகே சுத்தம் செய்ய பேரூராட்சி ஊழியர் சேக்கிழார் கூறினார். இதை தொடர்ந்து, ஐந்து பேருடன் சுத்தம் செய்ய சென்றோம். அங்கு, உலர்ந்த மனித கழிவை அள்ளினோம். ஈர மனித கழிவை அள்ளவில்லை. இதை ஏன் அள்ளவில்லை என, பேரூராட்சி ஊழியர் சேக்கிழார், துாய்மை பணி செய்த சிலரை அவதுாறாக பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். எனவே, பேரூராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.