உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர்களால் அவதி

 நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் பேனர்களால் அவதி

படப்பை: வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அதிகரிப்பால் இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரசங்கால், படப்பை, செரப்பணஞ்சேரி, வைப்பூர், ஒரகடம் பகுதிகளில் அதிக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை, வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், பலத்த காற்றின் போது பேனர்கள் முறிந்து விழும் சம்பவங்களும் இந்த சாலையில் நிகழ்ந்துள்ளன. எனவே, இந்த சாலையில் உள்ள மெகா சைஸ் விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி