உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மகாதேவர் கோவில் சாலையில் கான்கிரீட் பெயர்ந்து படுமோசம்

மகாதேவர் கோவில் சாலையில் கான்கிரீட் பெயர்ந்து படுமோசம்

எடையார்பாக்கம்; மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராமத்தில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், மகாதேவர்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு ஏற்றவாறு கண்டிவாக்கம்- - அக்கமாபுரம் செல்லும் சாலையில் இருந்து, மகாதேவர் கோவில் வரையில், கான்கிரீட் சாலை போடப்பட்டது.இந்த சாலையில் கனரக வாகனங்கள் சென்றதால், சாலை சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த கான்கிரீட் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.எனவே, எடையார்பாக்கம் மகாதேவர் கோவிலுக்கு செல்லும் சாலையில் இருக்கும் கான்கிரீட் பெயர்ந்து உள்ளது. அந்த பகுதியில் புதிய சாலை போட்டுத்தர வேண்டும்என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி