கட்டட கழிவு நெடுஞ்சாலைத் துறை அகற்றம்
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், ஆக்கிரமிப்பு இடிக்கப்பட்டு, சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த கட்டட கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், லாரி வாயிலாக கட்டட கழிவுகளை நேற்று அகற்றினர்.