மேலும் செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
12-Mar-2025
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் சுக்லபாளையம் தெருவில், பழமையான கற்பக விநாயகர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடைசியாக 1933ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்து, 90 ஆண்டுகள் கடந்த நிலையில் ஹிந்து சமய அறநிலையத் துறை அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்றவுடன், சிறிய அளவில் உள்ள பழமையான இக்கோவிலை சற்று பெரிய அளவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, திருப்பணி துவங்க உள்ளதையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி பாலாலயம் நடந்தது. தொடர்ந்து கோவில் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகன் கூறியதாவது:சின்ன காஞ்சிபுரம் கற்பக விநாயகர் கோவில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த சிறிய அளவிலான கோவில் சற்று பெரிய அளவில் கட்டப்பட்டு முருகன், துர்க்கை, நவக்கிரஹம் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து மூன்று மாதங்களில் திருப்பணி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
12-Mar-2025