உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அறுந்து விழுந்த மின் கம்பி மின்சாரம் பாய்ந்து மாடு பலி

அறுந்து விழுந்த மின் கம்பி மின்சாரம் பாய்ந்து மாடு பலி

குன்றத்துார், குன்றத்துார் அருகே சோமங்கலம் ஊராட்சி, மேலாத்துார் பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதே பகுதியில், நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றது.அப்போது, மேலாத்துார், அருந்ததியர்பாளையம் பகுதிக்கு செல்லும் மின் கம்பி, திடீரென அறுந்து விழுந்துள்ளது.அறுந்து விழுந்த மின் கம்பி உரசியதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.இந்நிலையில், மின் கம்பிகள் மீது உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை