உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோவில் சன்னிதி அருகில், தனிநபருக்கு சொந்தமான காலி இடத்தில் பயன்பாட்டில் இல்லாத, 20 அடி ஆழமுள்ள பாழடைந்த உறை கிணறு உள்ளது.நேற்று காலை மேய்ச்சலுக்காக வந்த பசு, பாழடைந்த கிணற்றில் விழுந்தது. கிணற்றில் இருந்து வெளியேற முடியாமல் கத்தியது. இதுகுறித்து, அப்பகுதியினர் நேற்று காலை 10:00 மணிக்கு காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் தீயணைப்புதுறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். பசு விழுந்து கிடந்த கிணறு, செடிகள் வளர்ந்து பாழடைந்து தண்ணீர் இருந்ததால், பசுவை மீட்க முடியவில்லை.இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வாயிலாக, இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் பசுவை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை