உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடை கூரையில் வளர்ந்துள்ள செடிகளால் சுவரில் விரிசல்

ரேஷன் கடை கூரையில் வளர்ந்துள்ள செடிகளால் சுவரில் விரிசல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்டபுரம் தெரு, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ரேஷன் கடை சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக்கடையில், 600க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கார்டின் வகைப்பாட்டிற்கு ஏற்பட அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பராமரிப்பு இல்லாத இந்த ரேஷன் கடை கட்டடத்தின் கூரையில் செடிகள் வளர்ந்துள்ளதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், ரேஷன் கடை கட்டடம் வலுவிழுக்கும் சூழல் உள்ளது.எனவே, ரேஷன் கடை சுவரில் வளர்ந்துள்ள செடியை வேருடன் அகற்றுவதோடு, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ