உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தென்னேரியில் பிப்., 19ல் தாதசமுத்திர தெப்போற்சவம் 

தென்னேரியில் பிப்., 19ல் தாதசமுத்திர தெப்போற்சவம் 

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டு, 99வது ஆண்டு தெப்போற்சவத்தை முன்னிட்டு, பிப்., 19ம் தேதி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, தென்னேரி, அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று, இரவு தென்னேரி கிராமத்தை வந்தடைவார்.அங்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதன் பின், இரவு 8:00 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தென்னேரி தெப்பலில், வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ