மழைநீர் கால்வாய் மேன்ஹோல் சேதம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையின் இரு ஓரங்களிலும் மழைநீர் வெளியேறும் வகையில், நெடுஞ்சாலைத் துறை வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகில், மழைநீர் வடிகால்வாய் மீது போடப்பட்டுள்ள, ‛மேன்ஹோல்' மூடி உடைந்த நிலையில் உள்ளது.சாலை தரைமட்டத்தில், கால்வாய், ‛மேன்ஹோல்' பகுதி திறந்து கிடப்பதால், இரவு நேரத்தில் சாலையோரம் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, மழைநீர் வடிகால்வாயின், 'மேன்ஹோல்' மீது சேதமடைந்த நிலையில் உள்ள பழைய மூடியை அகற்றிவிட்டு, புதிய மூடி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.