உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை வளைவு தடுப்புகள் சேதம்

சாலை வளைவு தடுப்புகள் சேதம்

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் - எண்டத்துார் சாலையை பயன்படுத்தி மதுராந்தகம், செங்கல்பட்டு, வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் உள்ள குப்பைநல்லுார் கிராமத்தில், இரண்டு இடங்களில் ஆபத்தான சாலை வளைவுகள் உள்ளன. இங்கு, சாலையில் செல்லும் வாகனங்கள் நிலைத் தடுமாறி, சாலையோர பள்ளத்தில் விழுவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த இரும்பு தடுப்புகள் மீது, அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி, சேதமடைந்து சரிந்துள்ளன. மேலும், இரவு நேரங்களில் இப்பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்துள்ள சாலையோர தடுப்புகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை