வியாக்ரபுரீஸ்வரர் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் சேதம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் பழமை வாய்ந்த வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை காட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் பக்தர்கள் நீராடி, வழிபாடு செய்வது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளாக குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் தண்ணீர் பாசி படிந்தும், குளத்தின் சுற்றுச்சுவர் உடைந்தும் காணப்படுகிறது. மேலும், குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. தொடர்ந்து, குளத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கோவில் குளத்தின் உடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.