சிறுபாலத்தின் தடுப்பு சுவர் சேதம்
கா ஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் இருந்து சிட்டியம்பாக்கம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச் சாலை உள்ளது. இந்த சாலையில், நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் சிறுபாலங்கள் உள்ளன. இந்த பாலங்களின் ஓரம், தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், ஒரு சிறுபாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் ஏற்பட்டு பாசன கால்வாய் குறுக்கே விழுந்துள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்றி, தடுப்பு சுவர் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - நா. அசோக்குமார், காஞ்சிபுரம்.