| ADDED : மார் 08, 2024 11:15 PM
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் உப்பேரி குளம் தெருவில், சிமென்ட் ஷீட் கூரை வேயப்பட்ட கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இக்கட்டடத்தின் பின்புறம் வளர்ந்துள்ள கொடுக்காப்புளி மரத்தின் கிளைகள், அங்கன்வாடி மையத்தின் சிமென்ட் ஷீட் கூரையில் உரசியபடி உள்ளது.இதனால், பலத்த காற்று அடிக்கும்போது, மரக்கிளை முறிந்து விழுந்தால், அங்கன்வாடி கூரை சேதமடைந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.இதனால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, அங்கன்வாடி மைய கூரையின் மீது உரசும் கொடுக்காப்புளி மரக்கிளையை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்திஉள்ளனர்.